சரியான வார்த்தைதான்.ரொம்ப ரொம்ப அலட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையம் இதை உருப்படியாக செய்யலாம்.
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கும் ஆணையம், முதலில் விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி இருக்க வேண்டும்.அங்கேயே இமாலய சறுக்கல்.ஒவ்வொருவரும் ஓட்டுப் போட அறிவுறுத்தும் போது , அடையாள அட்டை யார் கொடுப்பாங்க?
ஐந்து வருடம் வெட்டியாக சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு திரியும் ஆணைய அதிகாரிகள் இதைக் கூட செய்ய முடியாமல் என்ன கிழிக்கிறார்கள்?பெயரைச் சேர்க்க போனால்,அங்கு அலட்டல் அதை விட.
உண்மையாக ஒரு முகவரியில் இருந்து கொண்டு அடையாள அட்டை கேட்டால் ஆயிரம் கேள்விகள்.கட்சிக்காரன் என சொல்லிக்கொண்டு லட்சக் கணக்கில் சேர்க்கச் சொன்னால் உடனே சேர்க்கும் தாய் உள்ளம்.அவ்வளவு சரி பார்ப்பையும் உடனே செய்து விட்டார்களாம்.நமக்குதான் ஒரு வருடம் ஆகும்.
காந்திய வழி தன் வழி என சொல்லும் அதிகாரிக்கு கடைசி காலத்தில் எத்தனைக் கண்டு பயம் வந்தது எனத் தெரியவில்லை.ஒரு அதிகாரியின் பொறுப்பான பேட்டி போலவா இருக்கிறது?நான் ஒட்டு போடவில்லை.....தவறுகள் நடந்திருக்கலாம்..........என்னால் ஒன்றும் செய்ய முடியாது..................அப்படியானால் தேர்தலுக்கு முன் அவ்வளவு வீராப்பு ஏன் தலைவா? காந்தி அப்படித்தான் சொன்னாரா?
வெட்கங்கெட்ட தேர்தல் ஆணையம்.சேஷன் சேஷன் என்று ஒரு மானஸ்தன் இருந்தான்...!இப்போ தேடினாலும் கிடைக்க மாட்டான்....!
எவ்வளவோ கேலிப் பேச்சுகள், கிண்டல்கள் ,எதிர்ப்புகள் என பல்வேறு ஏவுகணைகளைப் பெற்று கடமை ஆற்றும் காவல் துறை அன்பர்களைப் பற்றி கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு நிலைமை.
கடந்த சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து சென்னை வந்த அரசுப் பேருந்து பெரம்பலூர் அருகே கடும் விபத்துக்குள்ளானது.ஓட்டுனர் சம்பவத்தில் அங்கேயே உயிர் இழந்தார்.கதவு திறக்கமுடியாமல் , சிறிய ஜன்னலை உடைத்து ஒவ்வொருவராக வெளியேற வேண்டிய நிலைமை.கடும் இருட்டு.எல்லோருக்கும் கடுமையான காயங்கள்.
மோதியதோ எரிவாயு லாரியுடன்.பயம் குழப்பம் ரத்தம் வலி என வரும் வண்டிகள் ஒவ்வொன்றையும் கை மறித்தால் யாரும் கண்டு கொள்ள வில்லை .யாரோ நினைவு படுத்த 100 க்கு ஒரே ஒரு கால். அவ்வளவுதான் அடுத்த 5 நிமிடங்களில் தொழுதூர், பெரம்பலூர் என காவல் துறை அதிகாரிகள் உட்பட பலரும் ,சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர்.
ஆறுதலாக பயப்பட ஒன்றும் இல்லை என ஆறுதல் சொல்லி, உறவினர்கள் வரும் முன் எங்களை அரவணைத்தது அந்தக் காவல் துறைதான்.உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து ஓவ்வோருவருவரையும் ஏற்றிவிட்டு......
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமணை ஊழியர்கள்.மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ,பொறுமையின் இலக்கணமாக நினைக்கும் மருத்துவ ஊழியர்களின் செயல் பாடுகள் ...கொடுமை...! தங்களின் தூக்கம் போன கோபத்தை அவர்கள் காட்டிய விதம், மரியாதை.. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கொஞ்சம் மரியாதையும் சொல்லிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இன்றுமுதல் அவர்களின் பார்வை பயணிகள் எல்லோருக்கும் கண்டிப்பாக மாறிவிட்டது.கொஞ்சம் கனிவுடன் , மரியாதையுடன் அவர்களைப் பார்க்க முயல்வோமே!எங்குதான் தவறுகள் இல்லை.நல்லவற்றையும் நினைக்கலாமே!
கண் தானம் செய்வதற்க்கான ஆவல் பெரும்பாலோருக்கு இருக்கின்றது.ஆனால் அதற்க்கான எளிமையான நடை முறை எளிதாக இருந்தால் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.அவசர உதவிக்கான 100 போன்று ,கண் தானத்திற்கும் ஒரு எளிய அவசர எண்ணை அறிமுகப் படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.
கண் தானத்திற்கு பதிவது என்பது நிறைய பேருக்கு முடிவதில்லை.அகால மரணமோ,திடீர் மரணமோ ஏற்படும் போது எளிதாக தொடர்பு கொள்ளும் ஒரு முறை இருக்கும் பட்சத்தில் நிறைய தானங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.