எவ்வளவோ கேலிப் பேச்சுகள், கிண்டல்கள் ,எதிர்ப்புகள் என பல்வேறு ஏவுகணைகளைப் பெற்று கடமை ஆற்றும் காவல் துறை அன்பர்களைப் பற்றி கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு நிலைமை.
கடந்த சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து சென்னை வந்த அரசுப் பேருந்து பெரம்பலூர் அருகே கடும் விபத்துக்குள்ளானது.ஓட்டுனர் சம்பவத்தில் அங்கேயே உயிர் இழந்தார்.கதவு திறக்கமுடியாமல் , சிறிய ஜன்னலை உடைத்து ஒவ்வொருவராக வெளியேற வேண்டிய நிலைமை.கடும் இருட்டு.எல்லோருக்கும் கடுமையான காயங்கள்.
மோதியதோ எரிவாயு லாரியுடன்.பயம் குழப்பம் ரத்தம் வலி என வரும் வண்டிகள் ஒவ்வொன்றையும் கை மறித்தால் யாரும் கண்டு கொள்ள வில்லை .யாரோ நினைவு படுத்த 100 க்கு ஒரே ஒரு கால். அவ்வளவுதான் அடுத்த 5 நிமிடங்களில் தொழுதூர், பெரம்பலூர் என காவல் துறை அதிகாரிகள் உட்பட பலரும் ,சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர்.
ஆறுதலாக பயப்பட ஒன்றும் இல்லை என ஆறுதல் சொல்லி, உறவினர்கள் வரும் முன் எங்களை அரவணைத்தது அந்தக் காவல் துறைதான்.உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து ஓவ்வோருவருவரையும் ஏற்றிவிட்டு......
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமணை ஊழியர்கள்.மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ,பொறுமையின் இலக்கணமாக நினைக்கும் மருத்துவ ஊழியர்களின் செயல் பாடுகள் ...கொடுமை...! தங்களின் தூக்கம் போன கோபத்தை அவர்கள் காட்டிய விதம், மரியாதை.. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கொஞ்சம் மரியாதையும் சொல்லிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இன்றுமுதல் அவர்களின் பார்வை பயணிகள் எல்லோருக்கும் கண்டிப்பாக மாறிவிட்டது.கொஞ்சம் கனிவுடன் , மரியாதையுடன் அவர்களைப் பார்க்க முயல்வோமே!எங்குதான் தவறுகள் இல்லை.நல்லவற்றையும் நினைக்கலாமே!
Post a Comment